எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

சனி, 14 நவம்பர், 2009

புதுயுகப் புரட்சி மலர்களுக்கு எம் வீரவணக்கம்.!


* தாய் நிலம் மீட்க

 தன்னையே ஈகை செய்த
 தற்கொடைப் பூக்களே..!
இப்புதிய பூமியின்-எம்
புரட்சி மலர்களே..!
எமது வீரவணக்கம்..!


* தமிழ்த் தாய்களின்
கருவறைகளில்
பேரினவாத வல்லூறுகளின்
வண்புணர்வின் வலிகள் பல
சுமந்து…..
பெண்மையின் மென்மை
துரத்தி….
பெரும் புயலாய் பெருக்கெடுத்து
கரும்புலியாய்
கறைகள் அழித்து
வரலாற்றை எமதாக்க-தம்
சுக வாழ்வினை அற்பணித்த
தியாகத் தீபங்களே..!
எமது வீரவணக்கம்..!


* தூர தேசங்களெங்கும்
கிளை பரப்பி- எமது
உரிமை மீட்புப் போருக்காய்
தூரத்து இடி முழக்கமாய்..,
கார்த்திகை மலர்களாய்..,
தமிழர் இதயமெங்கும் நிறைந்து
மலர்ந்து சிரிக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கம்..!


* முள்ளிவாய்க்காலின்
 உதிரக் கடலில்
மூழ்கடிக்கப்பட்ட எம்
முத்துக்களிலிருந்து
வெடித்து கிளம்பும்
வீரிய விதைகளாக
இப் பிரபஞ்சமெங்கும்
விளைந்து நிற்போம்


* ஈழ மண்ணில்
வித்தான ஒவ்வோர்
மாவீரர்களின் விதையாய்
மண்முட்டி எழும்
மான மறவர்களின்
ஈழத்து எழுச்சி விருட்சங்களாய்
எழுந்து நிற்போம்
எதிர்த்து வரும்
பகை விரட்ட….!


* எம்மை மறித்து நிற்கும்
அடிமை விலங்கை
அறுத்தெறியும் பாதை நோக்கி
பயணித்த..,
உமது தடம் பற்றி
தொடர்வோம்……..!


* திறந்த வெளி கொட்டடியில்
அனாதரவான வனாந்தரங்களில்
ஆயுதங்கள் முறைத்து நிற்கும்
முள்வேலி முகாம்களை
நொறுக்கி விட
வீர சபதமேற்போம்..!


* நீர் ஏந்திய சுடரை
ஏற்றிப் பிடிப்போம்..!
அணையா விளக்காய்.,
ஈகைச்சுடரை இதயத்தில்
சுமப்போம்…!


வீரவணக்கம்…! வீரவணக்கம்…!! வீரவணக்கம்…!!!


--குவைத்திலிருந்து…
  தமிழவன்

1 கருத்து:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

ஒவ்வொரு தீபம்
ஏற்றும் போதும் சொட்டும்
ஒவ்வொரு சொட்டுக்
கண்ணீரிலிருந்தும் -
முளைக்கட்டும் எம் ஈழ தேசம்!

தீப ஒளியில்
அனைவரின் மனதையும்
சுட்டு பரவட்டும் - நம்
விடுதலைக்கான உணர்வு!

நம் வீரர்கள் சிந்திய ரத்தம்
தோய்ந்த மண்ணின் கனவுகள்
நம் லட்சிய விளக்காய் -
நமக்குள் ஏற்றப் படட்டும் தோழர்களே!
----------------------------------
வித்யாசாகர்