எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம்.!

(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர்  சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை.........!.)



* என் இனிய தோழா..!

   நீ
   புதைக்கப்பட வில்லை
   விதைக்கப்பட்டிருக்கிறாய்..!

* விடுதலை வேட்கையில்
   உன்
   எரிதழல் ஏந்தி
   வீறு கொண்டெழும் தமிழினம்..!


* உன் ஆத்மா சாந்தியடைய
   உலகத் தமிழர்களின் சார்பில்
   என்
   கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்..!

* உன் ஒருவனின் உயிர் மூச்சில்
   ஓராயிரம் தமிழ்ச்செல்வன்களை
   எம்
   வீர தமிழச்சிகள்
   ஈன்றெடுப்பார்கள்
   ஈழப் பிறப்பிற்காக..!


* கயவர்களின் கழுகுப் பார்வையில்
   நீ
   எப்படி சிக்குண்டாய்?
   எம் ஈழவேந்தனே.!


* தொலைக்காட்சி செவ்வியிலே
   உன்
   புன்னைகை முகத்தில்
   தமிழீழம் கண்டோமடா
   தமிழ்ச்செல்வனே..!


* உன் அரசியல் பார்வையினை
   உலகமே வியந்ததடா..!
   அனுபவ முதிர்ச்சியில்
   ஆதிக்க சக்திகள் நடுங்கியதடா..!
   அன்புத் தோழனே.!


* தோல்விகள் எமக்கு புதிதல்ல..
   உன்
   வீர மரணம் புதிய வரலாறு
   படைக்க போகிறது..!

* புரியவில்லை கயவர்களுக்கு
   காட்டுமிராண்டிகளின்
   கூடாரம் சிதைந்து போகும்
   காலம்
   வெகு தூரமில்லை..! தோழா..!


* கால் நூற்றாண்டு விடுதலைப் போரில்
   உன்
   காலடித் தடங்கள்
   வீரத் தழும்புகளாய்
   எம் இதயவரைக்குள்..!


* மறக்க முடியாத
   நினைவலைகள்- எம்
   உறக்க நிலையில் கூட
   உன்
   அழகிய புன்னகை
   தலாட்டுகிறது தமிழ்செல்வனே..!

* செஞ்சோலைக் குருதியில் நனைந்த
   பிஞ்சு உள்ளங்களின்
   ஆறாத் துயரம்- மீள்வதற்குள்
   மீண்டும் உன் இழப்பு- எமக்கு
   தாங்க முடியவில்லையடா..!


* உடல் பிரிந்தாலும்
   உன்
   உயிரும் உணர்வும்
   ஈழ மைந்தர்களின் இதயத்தில்
   உறங்காத ஓசையாய்…!


* ஈழ மலர்ச்சியின்
   எழுச்சிப் போருக்கு
   நீ- கொடுத்த
   உயிர்த் தியாகத்திற்கு
   ஈடு இணையேதுமில்லை தோழா..!


* நீ- சிந்திய ஒவ்வொரு
  குருதித் துளியிலும் துளிர்த்தெழும்
  எழுச்சி விருட்சங்களுக்கு- எமது
  வீர வணக்கங்கள்.


                                          ஆற்றாமையோடும்....,
                                           மீளாத்துயரோடும்....,
                                           குவைத்திலிருந்து
                                           தமிழவன்

2 கருத்துகள்:

VIDHYASAGAR சொன்னது…

வீர வணக்கம்,

என் எழுதுகோலால் இயலாத உணர்வு பெருக்கை கவிதையில் உங்களின் புலமையும் ஆற்றாமையும் தட்டிஎழுப்பியுள்ளது தோழரே..

ஈழம் தழைக்கும்.. அதற்கு இது போன்ற வீரவணக்கங்கள் எழுச்சியை கிளப்பும்.. அந்த எழுச்சியின் அடி வேறாய் உயிர் தந்த இத் தியாக செம்மல்களின் ஆத்மாக்கள் ஆனந்த விடுதலையின் பொது சாந்தியடையுமென நம்புவோம் தோழரே..

வீர வணக்கம்!

வித்யாசாகர்
குவைத்

தமிழவன் சொன்னது…

தங்களின் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும், மிக்க நன்றி தோழரே..!

எழுச்சி வாழ்த்துக்களும், வீர வணக்கமும்...!